\
பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைக்க இரண்டாம் கட்ட நிதி விடுவிப்பு
Published on

பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைப்பதற்காக இரண்டாம் கட்ட நிதியையும் பள்ளிக்கல்வித்துறை விடுவித்துள்ளது.

ஏற்கனவே முதற்கட்டமாக ரூ.3.73 கோடி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், 2-ம் கட்டமாக ரூ.3.73 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு உருவாக்குதல், "மாணவர் மனசு" என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டி அமைத்தல் போன்றவற்றுக்கான 37,386 பள்ளிகளுக்கு தலா ரூ.2,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ம் தேதிக்குள் "மாணவர் மனசு" பெட்டி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், பெட்டியை 15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு முன்னிலையில் திறந்து, புகார்களுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com