ஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி

ஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி

ஐடிஐ படித்தவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சிப் பணி
Published on

மத்திய சுரங்கத்துறையின் கீழ் செயல்படும் பிலாஸ்பூரில் அமைந்துள்ள சௌத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL) எனப்படும் நிலக்கரி நிறுவனத்தில் டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட், ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்), எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இதில் அடங்கும்.

டிரேட் அப்ரண்டிஸ் பயிற்சி பணிகள்:
1. கம்யூட்டர் ஆப்ரேட்டர் அண்டு புரோகிராமிங் அசிஸ்டெண்ட் - 1,400
2. ஸ்டெனோகிராஃபர் (இந்தி / ஆங்கிலம்) - 100
3. எலக்ட்ரீசியன் - 1,600
4. ஃபிட்டர் - 1,500
5. வெல்டர் - 390 
உள்ளிட்ட பல்வேறு பணிகள்

மொத்தம் = 5,500 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 27.05.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.07.2019

வயது வரம்பு:
குறிப்பிட்ட சில பயிற்சிப் பணிகளுக்கு (Draughtsman, COPA, Stenographer மற்றும் Secretarial Assistant Trade) 16 வயதுக்கு குறையாமலும், மற்ற பயிற்சிப்பணிகளுக்கு 18 வயதுக்கு மேலும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் பணி சார்ந்த ஐடிஐ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், www.apprenticeship.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிக்காலம்: ஒரு வருடம்

பயிற்சிக்கால மாத ஊக்கத்தொகை: ரூ.7,655.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://secl-cil.in/writereaddata/2741_ENG_YR27052019.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com