கடும் வெப்பம்... தமிழ்நாடு, புதுச்சேரியில் மீண்டும் தள்ளிப்போகிறது பள்ளிகள் திறப்பு!

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

school students
school studentspt desk

முன்னதாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைந்து, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதியும், 1வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 5ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளி வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துறையின் செயலாளர் காகர்ல உஷா உள்ளிட்டவர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்

அதன் முடிவில்

* 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி திறப்பு ஜூன் 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

* 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் பள்ளித்திறப்பு தள்ளிப்போயுள்ளது. அதன்படி புதுச்சேரியில் ஜூன் 14-ல் பள்ளிகள் திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com