திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!

திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்!
Published on

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுமாறு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மைப்படுத்தவும் கழிவறைகளை சுத்தம் செய்து, பழுதுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப‌ கழிவறைகள், குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத் தில் புதர்கள், கற்குவியல்கள் மற்றும் கழிவுப்பொருட்களின் குவியல்கள் இல்லாதவாறு சரிசெய்யவும், பள்ளங்கள் ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அவற்றை மூட வேண்டும் என்றும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டடம், கூரை, கதவு, ஜன்னல்களை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com