நெருங்கும் நீட்: மார்ச்-ல் பயிற்சியை தொடங்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் வரும் மார்ச் முதல் மாணவர்களுக்கு தினந்தோறும் நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்விதுறை திட்டமிட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் பொதுத்தேர்வு இன்னும் 3 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு வரும் மார்ச் முதல் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. அதன்படி பொது தேர்வுகள் முடிவடைந்ததும் தினசரி நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன்
பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் 2000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னைக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 412 பயிற்சி மையங்களில் 100 மையங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அதில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் 312 வகுப்புகள் வரும் வாரம் முதல் செயல்பட தொடங்கும். 3000 ஆசிரியர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க ஏற்கனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.