டிசி (TC) வழங்கும் விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

டிசி (TC) வழங்கும் விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு
டிசி (TC) வழங்கும் விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு
TC ( மாற்றுச் சான்றிதழ் ) வழங்குவதில் தாமதமும், தடையும் கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறப்புக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ள சூழலில், பள்ளிகள் திறந்தவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
நாளை பள்ளிகள் திறந்தவுடன், தொடக்கப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு தாமதமின்றி TC வழங்கிட வேண்டும் என்றும், இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து TC கோரினால், அவற்றை தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் அனைத்து அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. TC வழங்கும் பணிகளை நாளையும், நாளை மறுநாளும் மேற்கொள்ளவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசுப் பள்ளிகளில் நாளைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்கும் நிலையில், 8-ம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் TC இல்லாவிட்டாலும் அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் TC பெற்று அதை சமர்ப்பித்த பின் முறையாக பதிவேட்டில் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தவிர, RTE சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com