கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்?
கனமழை காரணமாக சில மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக, கடலூரில் 6 சென்டி மீட்டரும், கேளம்பாக்கத்தில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலை கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.