ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், புரோபேசனரி ஆபிசர்ஸ் (POs) என்ற பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
புரோபேசனரி அதிகாரி (PO)
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் = 2,000 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 02.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.04.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 22.04.2019
ஆன்லைனில் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதிகள்: 8,9,15 & 16-06-2019
முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: ஜூலை முதல் வாரம்
ஆன்லைனில் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி: 20.07.2019
மொத்த தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி: அக்டோபர் இரண்டாவது வாரம்.
வயதுவரம்பு:
குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரையும் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 01.04.1998-க்கு முன்னும் 02.04.1989க்கு பின்னும் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
தொடக்க ஊதியமாக ரூ.27,620 முதல் அதிகபட்சமாக ரூ.42,020 சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கட்டணம்:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் - ரூ.125
பொது / EWS / OBC பிரிவினர் - ரூ.750
குறிப்பு:
செலுத்திய தேர்வுக்கட்டணத்தை எக்காரணம் கொண்டும் திரும்ப பெற இயலாது.
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பையே அல்லது பட்டயப்படிப்பையோ அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கடைசி வருடம் பயின்றவர்களும் அல்லது படித்து முடித்தவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு நடைபெறும் முறை:
1. முதல்நிலை தேர்வு
2. முதன்மை தேர்வு
3. குரூப் பயிற்சி மற்றும் நேர்முகத்தேர்வு
முதல் நிலை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள், 100 மதிப்பெண்கள் மற்றும் ஒரு மணி நேரத்தில் முடிவடையும்.
முதன்மை தேர்வானது, அப்ஜெக்டிவ் முறையில் 155 கேள்விகள், 200 மதிப்பெண்கள் மற்றும் மூன்று மணி நேரத்தில் முடிவடையும். அதுமட்டுமல்லாது டெஸ்கிரிப்டிவ் முறை தேர்வும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில், https://ibpsonline.ibps.in/sbiposmar19/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி
செய்யலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/010419-Detailed- Eng-PO%202019.pdf - என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.