பாரத ஸ்டேட் வங்கியில் வேலை காத்திருக்கிறது...விண்ணப்பிக்க நீங்கள் தயாரா!
பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில், பல்வேறு பணிகளில் வழக்கமான மற்றும் ஒப்பந்த முறை அடிப்படையில் பணிபுரிவதற்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதி வாய்ந்த இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
பணிகள்:
1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review) - Contractual Basis
2. துணை மேலாளர் (DM - IS Audit) - Regular Basis
3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit) - Contractual Basis
4. துணை மேலாளர் (DM - Debit card operations) - Regular Basis
5. துணை மேலாளர் (DM - Govt. e-Marketing) - Regular Basis
6. மேலாளர் (Manager - Debit Card Marketing) - Regular Basis
7. மேலாளர் (Manager - Smart City Projects) - Regular Basis
8. மேலாளர் (Manager - Transit / State Road Transport Corporation) - Regular Basis
9. மேலாளர் (Manager - UPI & Aggregator) - Regular Basis
10. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) - Contractual Basis
11. துணை பொது மேலாளர் (DGM - E&TA) - Regular
காலிப் பணியிடங்கள்:
1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review) - 15
2. துணை மேலாளர் (DM - IS Audit) - 06
3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit) - 05
4. துணை மேலாளர் (DM - Debit card operations) - 01
5. துணை மேலாளர் (DM - Govt. e-Marketing) - 01
6. மேலாளர் (Manager - Debit Card Marketing) - 01
7. மேலாளர் (Manager - Smart City Projects) - 03
8. மேலாளர் (Manager - Transit / State Road Transport Corporation) - 03
9. மேலாளர் (Manager - UPI & Aggregator) - 07
10. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) - 01
11. துணை பொது மேலாளர் (DGM - E&TA) - 01
மொத்தம் = 44 காலிப்பணியிடங்கள்
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.01.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.02.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த தொடங்கிய நாள்: 22.01.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.02.2019
சம்பளம்:
1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையும்,
2. துணை மேலாளர் (DM - IS Audit) என்ற பணிக்கு, மாத சம்பளமாக 31,705 ரூபாய் முதல் 45,950 ரூபாய் வரையும்,
3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.13 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரையும்,
4. துணை மேலாளர் (DM - Debit card operations) மற்றும் துணை மேலாளர் (DM - Govt. e-Marketing) என்ற பணிகளுக்கு, மாத சம்பளமாக 31,705 ரூபாய் முதல் 45,950 ரூபாய் வரையும்,
5. மேலாளர் (Manager - Debit Card Marketing),மேலாளர் (Manager - Smart City Projects) மேலாளர் (Manager - Transit / State Road Transport Corporation), மேலாளர் (Manager - UPI & Aggregator) என்ற பணிகளுக்கு, மாத சம்பளமாக 42,020 ரூபாய் முதல் 51490 ரூபாய் வரையும்,
6. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer) என்ற பணிக்கு, வருட சம்பளமாக ரூ.65 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரையும்,
7. துணை பொது மேலாளர் (DGM - E&TA) என்ற பணிக்கு, வருட சம்பளம் தோராயமாக ரூ.40.20 லட்சம் வரையும், வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்: 600 ரூபாய்
எஸ்.சி / எஸ்.டி / PWD பிரிவினருக்கான கட்டணம்: 100 ரூபாய்
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைனில் மட்டுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்த முடியும். வேறு எந்த முறைகளிலும் செலுத்த முடியாது.செலுத்திய தேர்வுக்கட்டணத்தை, எந்த காரணம் கொண்டும் மீண்டும் திரும்ப பெற இயலாது.
கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம்:
1. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - Credit Review): CA / MBA (Finance) / Master in Finance Control / Master in Management Studies / PGDM (Finance) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 2 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
2. துணை மேலாளர் (DM - IS Audit): B.E / B. Tech (ஐடி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
3. சீனியர் எக்ஸிகியூடிவ் (SE - IS Audit): B.E / B. Tech (ஐடி / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமெண்டேஷன்) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
4. துணை மேலாளர் (DM - Debit card operations): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
5. துணை மேலாளர் (DM - Govt. e-Marketing): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
6. மேலாளர் (Manager - Debit Card Marketing): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
7. மேலாளர் (Manager - Smart City Projects): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
8. மேலாளர் (Manager - Transit / State Road Transport Corporation): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
9. மேலாளர் (Manager - UPI & Aggregator): MBA / PGDM / PGDBM என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்த பட்சமாக 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தது 5 வருடங்கள் துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
10. தலைமை தொழில்நுட்ப அதிகாரி (Chief Technology Officer): B.E / B. Tech / Post Graduate (CS / IT) / MCA / M.Sc / M.Tech (CS / IT) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 20 வருடங்கள் ஐடி துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
11. துணை பொது மேலாளர் (DGM - E&TA): B.E / B. Tech / Post Graduate (CS / IT) / MCA / M.Sc / M.Tech (CS / IT) என்ற பட்டப்படிப்பை பயின்று, குறைந்தது 18 வருடங்கள் ஐடி துறை சார்ந்த அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர், ஆன்லைனில் https://bank.sbi/careers/ (அல்லது) https://www.sbi.co.in/careers/ என்ற இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். வேறு எந்த வகையிலும் விண்ணப்பிக்க முடியாது.
மேலும், இதைக் குறித்த முழு தகவல்கள் பெற,
https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191919-ADV-ENG.pdf / https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191912-ADV-ENG.pdf / https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191902-ADV-ENG.pdf / https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191853-ADV-ENG.pdf - என்ற இணையத்தில் சென்றும் பார்க்கலாம்.