டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை!

டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை!
டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை!

ஒடிசா மற்றும் மகாராஷ்டிராவில் செயல்படும் இந்திய எஃகு உருக்கு ஆலை நிறுவனமான, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL)- இல் அதிகாரி மற்றும் அலுவலக பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:
எக்சிகியூடிவ் அதிகாரி
ஆபரேட்டர் போன்ற பல்வேறு பணிகள்

காலிப்பணியிடங்கள்:
எக்சிகியூடிவ் அதிகாரி - 26
ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் - 179

மொத்தம் = 205 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியான தேதி: 22.06.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.07.2019 (நாளை)

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2019

வயது வரம்பு: (31.07.2019 அன்றுக்குள்)

1. ஆபரேட்டர் மற்றும் டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 18 முதல் 28 வயது வரை இருக்க வேண்டும்.
2. அதிகாரி பணிக்கு 18 முதல் 37 வயது இருத்தல் அவசியம்.
3. மற்ற பணிகளுக்கு 18 முதல் 30 வயது இருத்தல் அவசியம்.

தேர்வுக்கட்டண விவரம்:

1. எக்சிகியூடிவ் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.500
2. டிரெய்னி மற்றும் ஆபரேட்டர் பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.250
3. மற்ற அலுவலக பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.150

குறிப்பு:
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே இத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக ரூ.15,830 முதல் அதிகபட்சமாக ரூ.58,000 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

1. எக்சிகியூடிவ் அதிகாரி பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 
2. மற்ற ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குறைந்தபட்சமாக டிப்ளமோ இன் இன்ஜினியரிங் அல்லது அதிகபட்சமாக பொறியியல் பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். சைல் (SAIL) நிறுவனத்தின் இணையதளமான www.sail.co.in - என்ற இணையத்தில் சென்று, அதில் 'careers' - என்ற லிங்க்-இல் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.sailcareers.com/media/uploads/Full_ADVT_No._03_2019_Technical_Staff.pdf- என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com