டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் காத்திருக்கு வேலை!

டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் காத்திருக்கு வேலை!
டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் காத்திருக்கு வேலை!

சட்டீஸ்கரில் உள்ள பிலாய் என்ற இடத்தில் செயல்படும் இந்திய உருக்கு ஆலை நிறுவனமான, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் (SAIL)- இல் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டண்டண்ட் கம் டெக்னீசியன் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:

1. ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (Operator cum Technician)
2. அட்டண்டண்ட் கம் டெக்னீசியன் (Attendant cum Technician)
3. மைனிங் மேட் (Mining Mate)
4. ஃபையர்மேன் கம் ஃபையர் என்ஜின் டிரைவர் (டிரைனி) (Fireman cum Fire Engine Driver (Trainee)) 
5. ஜூனியர் ஸ்டாப் நர்ஸ் (Jr.Staff Nurse) உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

காலிப்பணியிடங்கள்:

1. ஆபரேட்டர் கம் டெக்னீசியன் - 123
2. அட்டண்டண்ட் கம் டெக்னீசியன் - 53,
3. மைனிங் மேட் - 30,
4. ஃபையர்மேன் கம் ஃபையர் என்ஜின் டிரைவர் (டிரைனி) - 36, 
5. ஸ்டாப் நர்ஸ் - 21,
உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

மொத்தம் = 296 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.11.2019 (நாளை)
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள்: 16.11.2019

வயது வரம்பு:
 
குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும்.

தேர்வுக்கட்டண விவரம்:

1. டிரெய்னி கம் ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.250
2. மற்ற அலுவலக பணிகளுக்கான விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.150

குறிப்பு:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர்  / மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு தேர்வுக்கட்டணம் கிடையாது.

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் மட்டுமே இத்தேர்விற்கான கட்டணத்தை செலுத்த முடியும்.

ஊதியம்:

குறைந்தபட்சமாக, ரூ.15,830 முதல் அதிகபட்சமாக ரூ.24,110 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு இணையான படிப்புடன் 2 - வருட ஐடிஐ சான்றிதழ் படிப்பு / 3 - வருட டிப்ளமோ இன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி அல்லது அதிகபட்சமாக இளங்கலை பட்டப்படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பயின்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

குறிப்பு:

1. நர்சிங் பணிக்கு, பி.எஸ்.சி இன் நர்சிங் பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் 1-வருட பணி அனுபவம் அவசியம்.
2. பார்மசிஸ்ட் பணிக்கு, டிகிரி இன் பார்மசி பட்டப்படிப்பில் தேர்ச்சி மற்றும் 1-வருட பணி அனுபவம் அவசியம்.
3. ஃபையர்மேன் கம் ஃபையர் என்ஜின் டிரைவர் (டிரைனி) பணிக்கு, 10ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேசன் படிப்பில் தேர்ச்சியுடன் குறைந்தது 1-வருட ஹெவி மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.  

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். 
சைல் (SAIL) நிறுவனத்தின், https://www.sailcareers.com/ - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://www.sailcareers.com/media/uploads/Advt_19-20_FINAL_3.pdf - என்ற இணையத்திற்கு சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com