மத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!

மத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!
மத்திய ரயில்வே துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்கள்!

இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக இந்திய ரயில்வேத் துறையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு லட்சம் காலிப் பணியிடங்கள் முதல்நிலை பணிகளான தண்டவாள பராமரிப்பாளர்கள், பல்வேறு பிரிவுகளில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் / அசிஸ்டெண்ட்ஸ், அசிஸ்டெண்ட் பாயிண்ட்ஸ்மேன் போன்ற பணிகளாகும்.  இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. Non Technical Popular Categories (NTPC) 
2. பாரா மெடிக்கல் பணியாளர்கள்
3. மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு பணிகள் 
4. RRC-யில் முதல்நிலை பணிகள் 

காலிப்பணியிடங்கள்:
NTPC பணி, பாரா மெடிக்கல் பணியாளர், மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு பணி - 30,000 பேர்
RRC-யில் லெவல்-1 பணி - 1,00,000 பேர்
மொத்தம் = 1,30,000 காலிப் பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
NTPC பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 28.02.2019, காலை 10.00 மணி
பாரா மெடிக்கல் பணியாளர் வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 04.03.2019, காலை 10.00 மணி
மினிஸ்டீரியல் & ஐசோலேடடு பிரிவு பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 08.03.2019, காலை 10.00 மணி
RRC-யில் லெவல்-1 பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 12.03.2019, காலை 10.00 மணி 

தேர்வுக்கான கட்டண விவரம்:
1. பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் - 500 ரூபாய்
2. மற்ற விண்ணப்பதாரர்கள் (எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உட்பட) - 250 ரூபாய் 

குறிப்பு: முதற்கட்ட கணினி வழித்தேர்வுக்குப் பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர் செலுத்திய தேர்வுக்கட்டணத்திலிருந்து ரூ.400 ரூபாயும், மற்ற விண்ணப்பதாரர் செலுத்தியதிலிருந்து ரூ.250 ரூபாயும் விண்ணப்பதாரரின் வங்கி கணக்கில் திரும்ப செலுத்தப்படும்.

தேர்வு முறை:
விண்ணப்பதாரர்களை கணினி வழித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தமிழகத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதல் மூன்று வகையான பணிகளுக்கு, www.rrbchennai.gov.in - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். RRC முதல்நிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.rrcmas.in - என்ற இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,
http://www.rrbcdg.gov.in/uploads/RRB%20Notice-English.pdf - என்ற இணையத்தில் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com