ரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு வேலை!

ரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு வேலை!
ரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு வேலை!

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) ஆகிய இரு பிரிவுகளிலும், 798 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
தகுதி வாய்ந்த மற்றும் திறமிக்க, ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரிடமிருந்தும் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

பணிகள்: 
கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்) 
கான்ஸ்டபிள் (சஃபாய்வாலா)
கான்ஸ்டபிள் (வாஷர்மேன்)
கான்ஸ்டபிள் (சலவையாளர்) 
கான்ஸ்டபிள் (முடி திருத்துநர்)
துணி தைப்பவர் (டைலர்)
செருப்புத் தைப்பவர் உள்ளிட்ட பல பணிகள்.

காலிப்பணியிடங்கள்:
கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்) - 452 
கான்ஸ்டபிள் (சஃபாய்வாலா) - 199
கான்ஸ்டபிள் (வாஷர்மேன்) - 49
மொத்தம் = 798 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2019, இரவு 11.59 மணி.
ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 01.02.2019, இரவு 11.59 மணி.
ஆப்லைனில் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 02.02.2019, இரவு 11.59 மணி.
கம்ப்யூட்டர் வழித்தேர்வு நடைபெறும் உத்தேசமான நாள்: பிப்ரவரி / மார்ச் - 2019

சம்பளம்: 
முடி திருத்துநர் மற்றும் செருப்புத் தைப்பவர் போன்றோருக்கான தொடக்க சம்பளம் - ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்), கான்ஸ்டபிள் (சஃபாய்வாலா), கான்ஸ்டபிள் (வாஷர்மேன்), கான்ஸ்டபிள் (சலவையாளர்) போன்றோருக்கான தொடக்க சம்பளம்- ரூ.21,700 முதல் ரூ69,100 வரை 
 

தேர்வுக் கட்டணம்: 
பொதுப் பிரிவினர் - 500 ரூபாய்
கம்ப்யூட்டர் வழித்தேர்வு எழுதியவர்களுக்கு, 500 ரூபாயில் 400 ரூபாய் திரும்ப செலுத்தப்படும்.

எஸ்.சி / எஸ்.டி / PwD / முன்னாள் ராணுவத்தினர் / பெண்கள் மற்றும் ஓபிசி பிரிவினர் -  250 ரூபாய்
கம்ப்யூட்டர் வழித்தேர்வு எழுதியவர்களுக்கு 250 ரூபாயும் திரும்ப செலுத்தப்படும்.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.
SBI வங்கியின் அனைத்து பணபரிமாற்ற முறைகளிலும் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.
கம்யூட்டர் வசதி கொண்ட, தபால் நிலையங்களிலும் தேர்வுக் கட்டணம் செலுத்தலாம்

வயது வரம்பு: (01.01.2019 அன்று)
18 முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பை, ஸ்டேட் போர்டிலோ அல்லது மெட்ரிகுலேசனிலோ படித்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

உடற்தகுதி:
இந்த தேர்வுக்கு உடற்தகுதி மிகவும் முக்கியமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிப்போர், http://www.indianrailways.gov.in- என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்க முடியாது.

மேலும், வயது தளர்வு, உடற் தகுதி மற்றும் தேர்வு முறை பற்றிய முழு தகவல் பெற,
https://www.tcyonline.com/tcyinfo/pdf/rpf-constable.pdf - என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com