இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!

இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர வாய்ப்பு!
Published on

டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2020 ஜூலை பருவத்தில் சேருவதற்கான, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு விருப்பமுள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.12.2019 மற்றும் 02.12.2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 07.04.2020

வயது வரம்பு:
விண்ணப்பதாரர், 01.07.2020 அன்றுக்குள், 11 வருடம் 6 மாதங்கள் வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் அவசியம். அத்துடன் 02.07.2007-க்கு முன்னதாகவும், 01.01.2009-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக்கூடாது.

குறிப்பு: வயது வரம்பில் எந்தத் தளர்த்தலும் கிடையாது.

கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர் 01.07.2020-இல் அங்கீகரிக்கப் பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டண்ட், இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், தபால் எண் - 248003 ’ என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டண்ட், இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி, டேராடூன் அவர்களுக்கு உத்தரகாண்ட்,  டேராடூன், டெல் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் (வங்கி குறியீடு - 01576) செலுத்தத்தக்க பொதுப் பிரிவினர் ரூ.600-க்கான, தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555-க்கான கேட்புக் காசோலையை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். (அல்லது) இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியின் இணைய வழியான www.rimc.gov.in - மூலமாகவும் கட்டணத்தை செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு 30.09.2019 அன்று மாலை 5.45 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறைகள்:
1. எழுத்துத் தேர்வு,
2. நேர்முகத் தேர்வு

குறிப்பு: 
1. எழுத்துத் தேர்வானது, ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்களை கொண்டது.
2. கணக்கு மற்றும் பொது அறிவு ஆகியன ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.
3. நேர்முகத் தேர்வானது விண்ணப்பதாரர்களின் அறிவுக்கூர்மை, தனித்தன்மை போன்றவற்றை ஆராய்வதாக அமையும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, http://www.tnpsc.gov.in/Notifications/2019_23_rimc_july_term.pdf அல்லது www.rimc.gov.in - போன்ற இணையதள முகவரிகளில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com