சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியீடு
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு முதல் பருவ தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிகழ் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை, சிபிஎஸ்இ நிர்வாகம் இரு பருவ தேர்வுகளாக நடத்தி வருகிறது. இதன்படி 12-ம் வகுப்புக்கு கடந்த நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற முதல் பருவத் தேர்வு முடிவுகள், பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.



முன்னதாக மார்ச் 12 ஆம் தேதி பத்தாம் வகுப்பின் முதல் பருவ தேர்வு முடிவுகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதிவரை நடைபெறுகிறது. அதுபோல 10 வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி மே மாதம் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com