`தேர்வர்களுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள்!’- ரயில்வே அறிவிப்பு

`தேர்வர்களுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள்!’- ரயில்வே அறிவிப்பு

`தேர்வர்களுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள்!’- ரயில்வே அறிவிப்பு
Published on

ரயில்வே வாரிய தேர்வுகளுக்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில்வே தேர்வு வாரிய இரண்டாம் கட்ட கணிப்பொறி தேர்வுகள் வருகிற ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - பெங்களூரு ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜூன் 13ம் தேதியன்று இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு பெங்களூர் சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் பெங்களூரு - திருநெல்வேலி ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் பெங்களூரிலிருந்து ஜூன் 17ம் தேதியன்று மாலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி - கர்னூல் டவுன் ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13ம் தேதிய ன்று மதியம் 12.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு கர்னுல் டவுன் சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் கர்னூல் டவுன் - தூத்துக்குடி ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் கர்னூல் டவுனில் இருந்து ஜூன் 17ம் தேதியன்று இரவு 07.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 02.00 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் எனவும், இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரக்குண்ட்லா, தாடி பத்திரி, துரோணாச்சலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கொல்லம் - திருச்சி ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் கொல்லத்தில் இருந்து ஜூன் 13ம் தேதியன்று இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.40 மணிக்கு திருச்சி சென்று சேரும் எனவும், மறுமார்க்கத்தில் திருச்சி - கொல்லம் ரயில்வே தேர்வு வாரிய சிறப்பு ரயில் (06055) திருச்சியில் இருந்து ஜூன் 17ம் த்தியன்று இரவு 11.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 09.15 மணிக்கு கொல்லம் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் துவங்க இருக்கிறது.

இந்த ரயில்களில் இரண்டு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இரண்டு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் ஏழு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 5 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com