குரூப் 1 வினாத்தாளில் பரியேறும் பெருமாள் தொடர்பான கேள்வி

குரூப் 1 வினாத்தாளில் பரியேறும் பெருமாள் தொடர்பான கேள்வி
குரூப் 1 வினாத்தாளில் பரியேறும் பெருமாள் தொடர்பான கேள்வி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் குரூப் - 1 தேர்வு வினாத்தாளில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தும் குரூப் 1 தேர்வானது இன்று நடைபெற்றது. 66 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் உள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்நிலையில், இன்று கேட்கப்பட்ட குருப் 1 வினாத்தாளில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்வியானது, “தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்யவும்” என அமைந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அந்தப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “  “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ;இது மானுட சமூகத்தின் பிரதி’ ” என்று அவரது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவைத் தவிர பெரியார், காமராஜர், அம்பேத்கர், திராவிடம், கீழடி, வேள்பாரி, தமிழர் நாகரிகம் தொடர்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com