புதிய தலைமுறை மற்றும் பெல் ஏற்பாடு செய்த ஆசிரியர் பயிற்சி கருத்தரங்கு
திருச்சி திருவெறும்பூர் ஆர்எஸ்கே சிபிஎஸ்சி பள்ளியில் புதிய தலைமுறை அறக்கட்டளை மற்றும் பெல் நிர்வாகம் சார்பில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
புதிய தலைமுறை அறக்கட்டளை சார்பில் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் 16 இடங்களில் பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாடப்பிரிவுகளையும் சேர்ந்த மூத்த பேராசிரியர்கள் எளிமையாக கற்பிக்கும் விதம் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் கிராமப்புற ஆசிரியர்கள் மட்டுமின்றி தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இருதரப்பினரும் தத்தம் சூழலில் கல்வி கற்கும் விதம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த கருத்தரங்கின் மூலம் கிராமப்புற மாணவர்களின் பிரச்னைகள் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது எனவும், நிச்சயம் அவர்களின் கல்விக்கு உதவ தங்களால் இயன்றதை செய்வோம் எனவும் நகர் புற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.