கல்வி
“தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பில் மறுபரிசீலனை செய்யப்படும்” - புதுச்சேரி முதல்வர்
“தேவைப்பட்டால் பள்ளிகள் திறப்பில் மறுபரிசீலனை செய்யப்படும்” - புதுச்சேரி முதல்வர்
புதுச்சேரியில் மாணவர்களுக்கு தொற்று பரவும் என்றால் பள்ளிகளை நடத்தும் முடிவுபற்றி மறுபரீசிலனை செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் கிராமப்புற மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாததால்தான் நேரில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடங்களில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் தெளிவுபடுத்திக்கொள்ள பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள 10, 12ஆம் வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மாணவர்களுக்குத் தொற்று பரவும் எனில் பள்ளிகள் திறப்பில் மறு பரிசீலனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.