\
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!
Published on: 

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வுகள் கொரோனா பரவலால் தடைபட்டது. இந்நிலையில், வரும் 11-ஆம் தேதி 11-ஆம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வும், 18 ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வும் நடைபெற உள்ளது. இதனிடையே, வரும் 15-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com