கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தக் கல்வியாண்டில் ஏழை மாணவர்கள் பள்ளிகளில் சேருவதற்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. அதில், தங்கள் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எத்தனை இடங்கள் இருக்கின்றன என்பதை மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை குறித்து விவரமாக அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது பள்ளிகளைச் சுற்றி வசிக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என்று மெட்ரிகுலேஷன் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2018-ஆம் ஆண்டில் கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 65 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.