\
ரூ.24.65 கோடியில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனம் - பிரதமர் திறந்துவைக்கிறார்

ரூ.24.65 கோடியில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனம் - பிரதமர் திறந்துவைக்கிறார்

ரூ.24.65 கோடியில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனம் - பிரதமர் திறந்துவைக்கிறார்
Published on

சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை வரும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

2012ஆம் ஆண்டு மே மாதம் முதல் தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில், செயல்பட்டு வந்த செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்காக பெரும்பாக்கத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் மத்திய பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ச்சியாக, 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com