கல்வி
கொரோனா பரவல்: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி
கொரோனா பரவல்: தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி
தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வுகள் காலவரம்பின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருக்கிறார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுவதாகவும், செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பரவல் குறைந்த பிறகே தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், விடுமுறை காலத்தை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.