JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு
JEE மற்றும் NEET தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

JEE மற்றும் NEET 2020 தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி நாட்டின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு தேசிய அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு சுமார் 25 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பரில் நடக்கவிருக்கும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி மாணவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கொரோனாவால் தேர்வு மையங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பிற பிரச்னைகளையும் கருத்தில்கொண்டு இந்த தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரியுள்ளனர்.

ஜூலை மாதம் திட்டமிட்டிருந்த JEE மற்றும் NEET 2020 தேர்வுகள் செடம்பர் மாதத்திற்கு ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இரண்டு தேசிய அளவிலான தேர்வுகளுக்கு சுமார் 25 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் JEEக்கு 9 லட்சம் விண்ணப்பங்களும் NEETக்கு 15 லட்சம் விண்ணப்பங்களும் பதிவாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com