பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி

அக்டோபர் 28 முதல் 31ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்களுக்கான தேர்வு, 129 மையங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வரும் அக்.28 - 31 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்வர்கள் அருகில் உள்ள மையங்களிலேயே தேர்வை எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததால் தேர்வு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தேர்வர்கள் அருகிலுள்ள தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதுவது குறித்து புதிய அரசாணை வெளியிடப்படும்" என தெரிவித்த அமைச்சர், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை ஒத்திவைக்கப்படுவதோடு, இதற்கான பணிகள் மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்பதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2 வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com