நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்: ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை

நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்: ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை

நாளை +2 பொதுத்தேர்வு தொடக்கம்: ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை
Published on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வு தொடங்குகிறது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ- மாணவியர்கள் நாளை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். 45,380 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்‌னர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சுமார் 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் கைப்பேசி எடுத்துவர முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com