மருந்தாளுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்.4 வரை நீட்டிப்பு!
தமிழக மருத்துவத்துறை மருந்தாளுநர் எனப்படும் ஃபார்மாசிஸ்ட் என்ற பணிக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் 353 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. அந்த தேர்வில் 2014 ஆம் ஆண்டு அரசாணை பின்பற்றப்படவில்லை என நவீன்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் மருந்தாளுநர்கள் பணியிட தேர்வில் பி.பாஃர்ம் பட்டதாரிகளும் விண்ணப்பிக்க அனுமதிக்கவும், விண்ணப்பிக்கும் தேதியை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய இயக்குநருக்கு உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல், பணி நியமனம் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் உத்தரவிட்டு இந்த வழக்கை ஏப்ரல்.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது, சென்னை உயர்நீதிமன்றம்.
அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 21 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று வந்துள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, கடைசி நாளாக ஏப்ரல்.4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மருந்தாளுநர் தேர்வுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: http://www.mrb.tn.gov.in/
தேர்வு பற்றிய முழு தகவல்களை பெற:
http://www.mrb.tn.gov.in/pdf/2019/Pharmacist_Notification_01032019.pdf
Link: https://goo.gl/opnbRQ