பவர் கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் வேலை
பவர்கிரிட் கார்ப்ரேஷனில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணிக்கு 150 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர் பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கேட் 2017 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அசிஸ்டெண்ட் என்ஜினீயர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.2.2018
விவரங்களுக்கு: http://www.powergridindia.com
பெல் நிறுவனத்தில் 50 என்ஜினீயர்களுக்குப் பயிற்சி
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பயிற்சிக் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பி.இ/ பி.டெக் அல்லது எம்.இ/ எம்.டெக் படித்திருக்க வேண்டும். 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் .
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.3.2018
விவரங்களுக்கு: http://www.bhel.com