முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்கு தள்ளிவைப்பு

முதுநிலை நீட் தேர்வு 8 வாரங்களுக்கு தள்ளிவைப்பு
Published on

முதுநிலை நீட் தேர்வு, 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்த முதுநிலை நீட் தேர்வை, 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம். 2021 முதுநிலை நீட் படிப்புக்கான கலந்தாய்வு 2022 முதுநிலை நீட் தேர்வின்போது நடப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுகளும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த EWC வழக்குகளின் விசாரணையால் தள்ளிவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின் கலந்தாய்வை உடனே நடத்தகோரி நடைபெற்ற  மாணவர்களின் போராட்டங்களை தொடர்ந்து, வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்து கலந்தாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com