பெரியார் பல்கலை. தேர்வில் சாதிரீதியான கேள்வி - விசாரணை நடத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு

பெரியார் பல்கலை. தேர்வில் சாதிரீதியான கேள்வி - விசாரணை நடத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு
பெரியார் பல்கலை. தேர்வில் சாதிரீதியான கேள்வி - விசாரணை நடத்த குழு அமைத்து அரசாணை வெளியீடு

சேலம் பெரியார் பல்கலைக்கழக பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைத்து மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டிருக்கும் ஆணையில், முதுநிலை வரலாறு பாடப்பிரிவிற்கு நடத்தப்பட்ட இரண்டாவது பருவநிலைத் தேர்வில் சாதி பற்றி கேள்வி கேட்கப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி உயர்கல்வித்துறை இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் மூவர் குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படுவதாக அரசின் ஆணையில் கூறப்பட்டிருக்கிறது.இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இப்பிரச்னையில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில் அடுத்ததாக பெரியார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற தேர்வுகளிலும் பல வினாக்கள் தவறாகவும் பிழையுடனும் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அண்ணாதுரை என்பதற்கு பதிலாக அண்ணாதுளை என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மீண்டும் தவறுகள் தொடர்வது குறித்து பல்கலைகழக பேராசிரியர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அந்த கட்டுரைக்கான லிங்க் இதோ! மீண்டும் தவறு... பெரியார் பல்கலை தேர்வு வினாத்தாளில் தொடரும் சர்ச்சை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com