தமிழகத்தில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு... பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு... பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு...  பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளில் சேர 2020-21ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின்கீழ் செயல்படும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகிய ஒன்பது கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கல்வித்தகுதி:

பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் டிப்ளமோ படிப்பை முடித்து இரு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்கவேண்டும். ஏற்கெனவே இரண்டு ஆண்டுகள் பணியாற்றி, தற்போது வேலையின்றி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.600. பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக் படிப்பு சேர்க்கை, கோயம்புத்தூர் என்ற பெயருக்கு வரைவோலையாக எடுக்கவேண்டும். ஆன்லைனில் பூர்த்தி செய்த பின்னர் விண்ணப்பத்தைப் டவுன்லோடு செய்துகொள்ளவேண்டும்.

அந்த விண்ணப்பத்துடன் வரைவோலையை இணைத்து 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு மாணவர் சேர்க்கை, கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), அவிநாசி ரோடு, கோவை- 641014' என்ற முகவரிக்கு அஞ்சல்வழியாக அனுப்பிவைக்கவேண்டும்.

சில முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் நிலை பற்றி செப்டம்பர் 10 ஆம் தேதி அறிந்துகொள்ளலாம். 11 முதல் 13 ஆம் தேதி வரை சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை ஆன்லைன் மற்றும் காணொலிக் காட்சி மூலமாகக் கேட்டு விளக்கம் பெறலாம். செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 30.8.2020 மாலை 5 மணிக்குள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com