அமெரிக்காவில் பணிவாய்ப்பு பெற்ற எஸ்.ஆர்.எம் மாணவர்களுக்கு பாரிவேந்தர் எம்.பி பாராட்டு

அமெரிக்காவில் பணிவாய்ப்பு பெற்ற எஸ்.ஆர்.எம் மாணவர்களுக்கு பாரிவேந்தர் எம்.பி பாராட்டு
அமெரிக்காவில் பணிவாய்ப்பு பெற்ற எஸ்.ஆர்.எம் மாணவர்களுக்கு பாரிவேந்தர் எம்.பி பாராட்டு

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றவர்களில் 11 மாணவ- மாணவியர் அமெரிக்காவில் பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளனர். பல்கலைக்கழக வேந்தரும் நடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ்.சி Speech language Pathology என்ற கல்வி பயின்ற ஒரே பேட்ஜை சேர்ந்த 11 மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஆண்டுக்கு தலா 56 லட்சம் ரூபாய் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பாரிவேந்தர், கடந்த சில ஆண்டுகளில் எஸ்.ஆர்.எம் குழும கல்லூரிகளில் பயின்ற 12 ஆயிரம் மாணவர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அரசே வேலைவாய்ப்புகளை உருவாக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய பணிவாய்ப்புகளை எஸ். ஆர்.ஆம் கல்வி நிறுவனம் அதிகளவில் உருவாக்கித் தருவதாக பாரிவேந்தர் பெருமிதம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com