மத்திய அரசின் பணிகளுக்கு இனி பொது தகுதித் தேர்வு! இந்த ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?

மத்திய அரசின் பணிகளுக்கு இனி பொது தகுதித் தேர்வு! இந்த ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?
மத்திய அரசின் பணிகளுக்கு இனி பொது தகுதித் தேர்வு! இந்த ஆண்டு தேர்வு எப்போது தெரியுமா?

இந்த ஆண்டு முதல், இந்தியாவில் நான்-கெஜடட் பிரிவில் பணியிடங்களுக்கு பொதுவான தகுதித் தேர்வு (CET) நடைபெறும் என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு, 2022 இறுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஆறு தன்னாட்சி அமைப்புகள் பங்குகொண்ட நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து பேசியுள்ளார் k இணையமைச்சர் ஜிதேந்திர சிங். அவர் பேசுகையில், “பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பில், இனி நான் கெஜடட் தேர்வுகளுக்கு பொதுவான தகுதித் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இவ்வருடத்துக்கான தேர்வு நடைபெறும். இது, வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக தொலைதூர மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் எளியோருக்கு, மிகவும் உதவியாக இருக்கும். பொருளாதார ரீதியாகவோ - சமூக ரீதியாகவோ அவர்கள் பாகுபாடு காட்டப்படாமல் இருக்கவும் வழிவகுக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது இருக்கும் வகையில் இத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களை நோக்கி செல்லும் தொலைவு, நேர விரயம், செலவு அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு உதவியாக இருக்கும்” என தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்றும், பின்னர் அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளும் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், தேர்வை எழுத வயது வரம்பும் கிடையாது என்று கூறப்படுகிறது. மத்திய அரசுத்துறைகளில் வேலை வேண்டும் என கருதும் பெரும்பாலானோர், பணியிட எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எஸ்எஸ்சி, வங்கி, ரயில்வே தேர்வுகளைதான் முதலில் விரும்பி அவற்றுக்கு விண்ணப்பிப்பார்கள். அவற்றுக்கு மாற்றாக தற்போது உத்தேசிக்கப்படும் திட்டம் அமலுக்கு வந்தால், தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதால், விரும்பிய எந்த துறையின் தேர்வுக்கும் அவர்கள் விண்ணப்பிக்கும் வசதி கிடைக்கும்.

இவ்வகை பொதுத்தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி சில மாதங்களுக்கு கூறியிருந்த கருத்தில், “தற்போதைய தேர்வு நடைமுறைகளின்படி வெவ்வேறு பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வகளை எழுதுவோர், பல வகை தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். இதனால் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்கள், பல அழுத்தங்களை எதிர்கொள்வதுண்டு. தேசிய ஆள்சேர்ப்பு முகமை நடத்தும் பொது தகுதித்தேர்வு மூலம், இனி பல தேர்வுகளுக்கு தயாராகும் நிலைக்கு முடிவு காணப்பட்டு, இளைஞர்களின் மதிப்பான நேரத்தையும் ஆற்றலையும் சேமிக்க முடியும்” என்று கூறியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com