கல்வி
போட்டித் தேர்வர்களே கவலையை விடுங்கள்... இணையவழி கருத்தரங்கு தொடக்கம்
போட்டித் தேர்வர்களே கவலையை விடுங்கள்... இணையவழி கருத்தரங்கு தொடக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து பல்வேறு போட்டித் தேர்வு பயிற்சிகளும் இணையவழியாகவே நடக்கத் தொடங்கியுள்ளன.
அண்ணா நூற்றாண்டு நூலகம் குடிமைப்பணித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி போன்ற வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதுற்கு உதவியாக இணையவழி கருத்தரங்குகளை நடத்துகிறது. இன்று முதல் செப்டம்பர் 5 ம் தேதி வரை அந்த தொடர் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இணையவழி கருத்தரங்குகள் பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ளவேண்டிய சமூகவலைதள முகவரிகள்:
www.youtube.com/aclchennai /
www.facebook.com/ACLChennai