\
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு - இன்று தொடக்கம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு - இன்று தொடக்கம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு - இன்று தொடக்கம்
Published on

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இணையவழி விண்ணப்பப்பப் பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதன்முறையாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே இணையதளம் மூலம் இணையவழி விண்ணப்ப முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவசதிகள் இல்லாத மாணவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் மாவட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளும் இன்று முதல் தங்களது இணையதளங்கள் மூலம் விண்ணப்பப் பதிவை தொடங்கலாம் என தெரிவிக்கபட்டிருந்தது. இக்கல்லூரிகளுக்கு தனித்தனியாக அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தில்தான் விண்ணப்பிக்க முடியும்.

பொது இணையதளம் அரசுகலை அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு கலை அறிவியல் கல்லூரிகள் - www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களிலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் - www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளங்களிலும் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com