மதுரை காமராஜர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: அறிவிப்பு வெளியீடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: அறிவிப்பு வெளியீடு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: அறிவிப்பு வெளியீடு
Published on

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், வரும் கல்வியாண்டிற்கான முதுகலை படிப்பிற்கு விண்ணப்பப்படிவங்கள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியில் முதலாம் ஆண்டுக்காண மாணவ, மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணையதள வாயிலாக தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து தற்போது முதுகலை பட்டப் படிப்புகளான M.Phil மற்றும் Ph.d பட்டப் படிப்புகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலம் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பம், கடந்த ஜூலை 18 ஆம் தேதிதொடங்கிய வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்ப படிவமானது www.mkuniversity.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் வசந்த  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com