
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,11,12ஆம் வகுப்பு பயிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைகாட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 10,11,12-ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31 வரை நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.