கல்வி
மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 6,958 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,925 பி.டி.எஸ் இடங்கள் என மொத்தம் 8883 இடங்களுக்கான இணையதள விண்ணப்பங்கள் இன்று முதல் மாணவர்களிடமிருந்து பெறப்பட உள்ளன.
10 மணிக்கு இதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்ட பின், நீட் தேர்வில் தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இன்று முதல் தொடங்கி இணைய வழி விண்ணப்பிக்க ஜனவரி 7-ஆம் தேதி மாலை 5 மணி கடைசி நாள் என்றும், விண்ணப்ப நகல் சென்றுசேர ஜனவரி 10-ஆம் தேதி மாலை 5 மணி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.