ஓமைக்ரான்: பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

ஓமைக்ரான்: பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

ஓமைக்ரான்: பள்ளி, கல்லூரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
Published on

சென்னையில் இதுவரை 26 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கல்லூரிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் கோவிட் தடுப்பூசி செலுத்தவேண்டும். மாணவர்கள் வகுப்பறைகள், நூலகம், விளையாட்டு மைதானம், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா முகக்கவசம் அணிகிறார்களா என்பதை ஆசிரியர்கள் கவனித்து உறுதி செய்ய வேண்டும். கூட்டம் சேரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை கல்லூரிகள் தவிர்க்க வேண்டும்.

விடுதிகளில் சாப்பிடும்போது சில்வர் தட்டுக்கு பதில் மாணவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாழை மட்டையால் ஆன தட்டுகளை வழங்கவேண்டும். ஒரே தட்டை பலர் உபயோகிக்கும்போது தொற்று எளிதில் பரவுவதற்கான அபாயம் உள்ளது, வகுப்பறைகளில் குளிர்சாதன கருவிகளை செயல்படுத்தக்கூடாது.

சரியான கால இடைவெளியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல்நலன் தொடந்து பரிசோதிக்கப்பட வேண்டும்.
மேலும், கல்லூரிகள் தங்கள் வளாகத்தில் சிறப்பு கோவிட் தடுப்பூசி முகாமை நடத்த விரும்பினால் மாநகராட்சியை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com