எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு

எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு
எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு

எம்.சி.ஏ. படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது

எம்.சி.ஏ. முதுகலை படிப்பானது தற்போது 3 ஆண்டுகளாக உள்ளன. இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, எம்.சி.ஏ. படிப்பு மூன்று ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எடுக்கப்பட்ட முடிவின் படி பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி வரும் 2020-21 கல்வி ஆண்டு முதல் எம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகளாக இருக்குமென்றும் தெரிவித்துள்ளது. மேலும் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எம்சிஏ படிப்பிற்கு தகுதி வரம்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிசிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிஎஸ்சி அல்லது அது தொடர்பான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பி.காம், பி.எஸ்.சி., பி.ஏ.,வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் 10, 12-ம் வகுப்பில் கட்டாயம் கணிதம் பாடம் எடுத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்சிஏ படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் நிலையில் மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்கவும், எம்.சி.ஏ. படிப்பை
எளிதாக்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com