11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து கோரிய வழக்கு: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய கோரப்பட்ட வழக்கில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கே.கே.ரமேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் தனது மனுவில் 11ஆம் வகுப்பு தேர்வு, பொதுத் தேர்வாக்கப்படுவதால் பெற்றோரும், மாணவரும் பாதிக்கப்படுவர் என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வு எழுத வேண்டி உள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தார்.
கடந்த மே 22 ஆம் தேதி, இந்த கல்வி ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு தேர்வு, பொதுத்தேர்வாக நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.