கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்

கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்

கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்: சோனுசூட்
Published on

மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்த சொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சோனுசூட் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “மாணவர்கள் அனைவரையும் கல்விக் கட்டணங்களை செலுத்தசொல்லி பள்ளி மற்றும் கல்லூரிகள் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து அவர்களின் ஆன்லைன் வகுப்புகளை நிறுத்த வேண்டாம். அவர்கள் திரும்பவும் மீண்டுவர சிறிது அவகாசம் கொடுங்கள். உங்களின் இந்த சிறிய ஆதரவு பலரின் வாழ்க்கையை காப்பாற்றும். இந்த இரக்க குணம் உங்களையும் சிறந்த மனிதர்களாக ஆக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com