\
96 இடங்களில் 91 வட மாநிலத்தினர்; 5 தமிழர்கள்: மீண்டும் சர்ச்சையாகும் ரயில்வே தேர்வுகள்!

96 இடங்களில் 91 வட மாநிலத்தினர்; 5 தமிழர்கள்: மீண்டும் சர்ச்சையாகும் ரயில்வே தேர்வுகள்!

96 இடங்களில் 91 வட மாநிலத்தினர்; 5 தமிழர்கள்: மீண்டும் சர்ச்சையாகும் ரயில்வே தேர்வுகள்!
Published on

ரயில்வே தேர்வுகளில் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலர் பதவி உயர்வுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தமிருந்த 96 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி , மார்ச் மாதங்களில் நடைபெற்ற தேர்வில் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில், 3ஆயிரம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில், பாதுகாவலர் பதவி உயர்வு தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 91 பேரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ரயில்வே தேர்வுகளில் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சரக்கு ரயில்களின் பாதுகாவலர் பதவி உயர்வுக்கான தேர்வும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. ரயில்வே தேர்வுகளில் தமிழர்கள் புறக்கணிப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இது போன்ற தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com