கல்வி
பள்ளி கல்வித்துறையில் 15நாட்களில் அதிரடி மாற்றம் - செங்கோட்டையன்
பள்ளி கல்வித்துறையில் 15நாட்களில் அதிரடி மாற்றம் - செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோர் தெரிந்துகொள்ளும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.