கல்வி
நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: அருண் ஜெட்லி
நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: அருண் ஜெட்லி
நாடு முழுவதும் புதியதாக 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இதில் நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் மூன்று நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி,
புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.