இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை எழுதி தகுதி பெறுவோர் மட்டுமே இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதுகலை நீட் தேர்வு ஏற்கெனவே முடிந்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு வரும் மே 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையம் வழியாக கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.
இளங்கலை நீட் தேர்வுக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6 ஆம் தேதி (நாளை ) கடைசி நாளாகும்.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இதில் 15,000 மேற்பட்டவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பதால் இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நீட் தேர்வுக்கு நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலரும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
https://neet.nta.nic.in/ என்ற மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும்.