வெளியானது இளநிலை நீட் தேர்வின் முடிவுகள்: தேர்வாளர்களில் 56.30% பேர் தேர்ச்சி!

வெளியானது இளநிலை நீட் தேர்வின் முடிவுகள்: தேர்வாளர்களில் 56.30% பேர் தேர்ச்சி!
வெளியானது இளநிலை நீட் தேர்வின் முடிவுகள்: தேர்வாளர்களில் 56.30% பேர் தேர்ச்சி!

நீட் தேர்வில் அகில இந்திய அளவில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அளவில் முதலிடம் பிடித்த திரிதேவ் விநாயகா என்ற மாணவர் தேசிய அளவில் 30-வது இடம் பிடித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தேர்வு எழுதிய 17,64,000 பேரில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 56.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் எழுதியவர்களில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 30-வது இடமும், தமிழ்நாட்டை சேர்ந்த எம்.ஹரிணி 702 மதிப்பெண் பெற்று 43-வது இடத்தையும் பிடித்துள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் வரும் 10ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வு தொடங்குகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com