நீட் தேர்வின்படி தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஒசூர் மாணவர் முதலிடம்

நீட் தேர்வின்படி தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஒசூர் மாணவர் முதலிடம்
நீட் தேர்வின்படி தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஒசூர் மாணவர் முதலிடம்

நீட் தேர்வின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

சென்னையில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். நீட் தேர்வில் 656 மதிப்பெண்கள் பெற்று ஒசூர் மாணவர் சந்தோஷ் முதலிடமும், கோவை மாணவர் முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர். திருச்சி மாணவர் சையது ஹபீஸ் 651 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தினை பெற்றார்.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் 22 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது தெரிய ‌வந்துள்ளது. 500-லிருந்து 600 மதிப்பெண்ணுக்குள் 181 மாணவர்கள் எடுத்துள்ளனர். 400ல் 499 மதிப்பெண்ணுக்குள் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை 623 என பட்டியலில் தெரியவந்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் தேர்வானதால், மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வில் பங்கேற்கப் போவதில்லை என்று, தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்த மாணவர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். கோவையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வுக்காக கடந்த ஒரு வருடமாக பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com