கல்வி
ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது நீட் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு
ஜனவரி 12-ம் தேதி தொடங்குகிறது நீட் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு
முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜனவரி 12-ம் தேதி தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மருத்துவ கலந்தாய்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் “முதுகலை மருத்துவ கவுன்சிலிங், மருத்துவ கலந்தாய்வு குழுவால் ஜனவரி 12, 2022 முதல் தொடங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கவுன்சிலிங், இந்தியாவில் கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் நாட்டிற்கு மேலும் பலத்தை அளிக்கும். அனைத்து முதுநிலை மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.