நீட் தேர்வு: தமிழில் தேர்வு எழுதுவோர் 17 மடங்கு உயர்வு

நீட் தேர்வு: தமிழில் தேர்வு எழுதுவோர் 17 மடங்கு உயர்வு
நீட் தேர்வு: தமிழில் தேர்வு எழுதுவோர் 17 மடங்கு உயர்வு

தமிழகத்தில் தமிழில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கையும் 17 மடங்கு அதிகரித்துள்ளது நல்ல மாற்றத்தைக் காட்டுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது.

தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 412 இலவச நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 6,692 பேர் நீட் தேர்வை எழுதினர். அதில் 1,615 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டில் நீட் தேர்வை 1,017 பேர் தமிழில் எழுதினர். இந்த ஆண்டு தமிழில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 17,101 ஆக அதிகரித்துள்ளது.

கோவை மாணவி வாசுகி 580 மதிப்பெண்களும், காஞ்சிபுரம் மாணவர் சக்திவேல் 552 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜீவித்குமார் 644 மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். ஆடு மேய்க்கும் கூலித்தொழிலாளியின் மகனான அவர் தனியார் பயிற்சி மையத்தில் படித்து சாதனை படைத்திருக்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால், அதிக அளவில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறமுடியும். எதிர்வரும் ஆண்டுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சிபெறுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com